தினம் தினம் கவலைகள் மட்டுமே எஞ்சி இருக்கும் உறங்க போகும்போது . மறுநாள் மட்டும் என்ன விதிவிலக்கா ?
வாழ்க்கை மட்டுமே பிளந்தது என்று நினைத்த எனக்கு , காலை மலம் கழிக்க போன பிறகு தான் தெரிந்தது பிளந்தது வாழ்க்கை மட்டுமல்ல என்று .
ஆம் !!! ஆசனவாய் பிளவு ( fissure in ano ) .
அப்படி என்றால் என்ன என்று கேட்போருக்கு ! தயவு செய்து நேரம் ஒதுக்கி internet-ல் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவும் .
உங்கள் lifestyle-லால் வர கூடிய ஒன்று தான் இந்த நோயும் . ஆரம்ப கட்டத்தில் இதை சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற்று , அதற்கேற்ப இருந்தால் எளிதில் குணமடையலாம் . மீண்டும் வராமலும் தவிர்க்கலாம்.
இதை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் , அந்நியன் படத்தில் கும்பிபாகம் நினைவு இருக்கிறதா ??
Fissure oru மினி கும்பிபாகம் தான் .